Skip to main content

“அந்த உச்சந்தலை முத்தம்..” - ‘கர்ணன்’ படம் குறித்து ஜோதிமணி எம்.பி. 

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Jothimani MP Twitted about Karnan film

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் கரூர் எம்.பி. ஜோதிமணி, ‘கர்ணன்’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “‘கர்ணன்’ ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை, வலியை, எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும், குறியீடுகளும் நிறைய. அந்த உச்சந்தலை முத்தம்... சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்!” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.