/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jothiman4433.jpg)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர்ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எனது கோரிக்கையை ஏற்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியைச் சந்தித்து அரவக்குறிச்சி, மணப்பாறை, விராலிமலை சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.
பிறகு தமிழக முதலமைச்சரிடமும் இந்த வேண்டுகோளை முன்வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று மணப்பாறை, அரவக்குறிச்சி தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் அரவக்குறிச்சி, மணப்பாறை தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)