/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/job1 (1).jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாருமான வசந்தன் என்கிற கார்த்திகேயன், கட்சியின் நிர்வாகிகளுடன் மிகவும் நெருங்கி பழக கூடியவர். அதேபோல் தொகுதி மக்களுக்கும் நெருக்கமாவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தன்னால் இயன்றவரை செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 23- ஆம் தேதி ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தினார். இந்த முகாமில் ஹோண்டா, நிப்பான் பெயிண்ட், பட்டர்பிளை உள்ளிட்ட 14 நிறுவனங்கள் கலந்துக் கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் என 2,500-க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.
இதில் நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
வேலை வாய்ப்பு முகாமில் நிறுவனங்கள் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதி மக்களும் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)