


Published on 22/03/2020 | Edited on 22/03/2020
பிரதமர் நரேந்திர மோடி கேட்டுககொண்டதன்படி இன்று மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்துள்ளனர். இந்தியா முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே யாரும் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இன்று அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் மக்கள் வீட்டிலேயே இருந்தனர். வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஜெயங்கொண்டம் நகரமே வாகனங்கள் மனித நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ராணுவக் கட்டுப்பாடு ஒற்றுமையை கடைபிடித்த பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.