/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fxdh_0.jpg)
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை எனக் கூறும் இந்த அறிக்கை, ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அங்கு என்னென்ன உணவு வகைகளை சாப்பிட்டார் என்பது குறித்து ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இட்லி, தயிர் சாதம், பொங்கல், ஓட்ஸ், தக்காளி சாதம், சீத்தாப்பழம், திராட்சை போன்ற உணவுப்பொருட்களை அவர் உண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)