









Published on 07/05/2018 | Edited on 07/05/2018

மறைந்த முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் அறிவித்தது. இதற்காக ரூ.50.80 கோடியில் டெண்டா் விடப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது.
மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.