குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. பின்னர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேபோல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும் போலீசார் தடியடி நடத்தினர்.

Advertisment

 JamiaProtest-Citizenship Amendment Act-tamilnadu student protest

மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை, கோவையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேபோல் சென்னை சென்ரல் அருகே இந்திய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisment