மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் 73 நாட்களாக தலைநகர் டெல்லியில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (06.02.2021) நாடு தழுவிய 'ஜக்கா ஜாம்' என்ற சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 'ஜக்கா ஜாம்' போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mjk-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mjk-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mjk-3.jpg)