Skip to main content

நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்களாக மாறும் ஜெய்ன் மிஷன் பள்ளி வாகனங்கள்!

Published on 16/07/2020 | Edited on 22/07/2020

 

கரோனா இல்லா நகரமாகச் சென்னையை உருவாக்கும் நோக்கில் ஜெய்ன் மிஷன் பள்ளி வாகனங்கள், நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்களாக இயக்கப்படவுள்ளது.

 

கரோனா வைரஸ் பரவல் அதிமுள்ள பகுதிகளில் வீடுகளுக்கே சென்று விரைவாகக் கரோனா பரிசோதனை செய்யும் முயற்சியாகக் கரோனா பரிசோதனைக்கான அத்தனை வசதிகளுடன் கூடிய 30 நடமாடும் வாகனங்களைச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். சென்னை தி.நகரில் உள்ள ஶ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெய்ன் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

சார்ந்த செய்திகள்