Published on 05/07/2018 | Edited on 05/07/2018

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஜெய் ஆனந்த் ஆஜரானார். இதேபோல் அப்போலோ மருத்துவமனையின் டெக்னிஷியன் நளினி விசாராணை ஆணையத்தில் இன்று ஆஜரானார்.