ஆந்திர மாநில முதல்வரும், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன்ரெட்டிக்கு, தமிழகத்தில் பேரவை தொடங்கியுள்ளார்கள். இந்த பேரவையின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, நியூடவுன் புறுவழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

Advertisment

jaganmohan reddy party workers meeting in tamilnadu

இந்த நிகழ்ச்சிக்கு பேரவையின் தமிழக மாநில தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். ஒருங்கிணப்பாளர் புலியேந்திரன் அனைவரையும் வரவேற்றுள்ளார். நிகழ்ச்சியில் குப்பம் ஒன்றிய செயலாளர் ஹெச்.எஸ்.முருகன், ஆந்திர மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.தேவா ஆகியோர் கலந்து கொண்டு ஆந்திர மாநில முதல்வரின் ஆட்சியின் அருமை, பெருமைகளை பேசி, அவருக்கு நாம் தமிழகத்தில் பேரவை தொடங்குவது மகிழ்ச்சிக்குறியது என்றார்.

Advertisment

இந்த பேரவையின் விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் ஆர்.ராஜா கலந்து கொண்டு தமிழகத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, தலைவரை தமிழகத்தில் எப்படி புரமோட் செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆந்திர மாநில நிர்வாகிகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.