Skip to main content

'அது பக்தர்களின் விருப்பம்... '-தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

'It is the will of the devotees ...' - Case against Archana in Tamil dismissed!

 

அண்மையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்தைத் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது. இது தமிழ் ஆர்வலர்கள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''1998 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது எனவே கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை மாற்றக்கூடாது'' எனக் கூறியிருந்தார்.

 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு மனுதாரரின் வாதத்தை ஏற்கமறுத்து, ''2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்யவேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்யவேண்டும் என வற்புறுத்தக் கூடாது. எனவே ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது'' எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்