Skip to main content

'அது நடந்தால் வருத்தப்பட வேண்டியது ஸ்டாலின்தான்' - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

mafa

 

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதிமுக சார்பிலும், திமுக சார்பிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த சிலநாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த சிலநாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும். வரும் தேர்தலில் அதிமுகவுடன் 12 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி என ஒன்று அமைந்தால் வருத்தப்படப்போவது திமுக தலைவர் ஸ்டாலின்தான்'' எனக் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவிற்கு ஜால்ரா அடிக்கும் அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை'-புகழேந்தி பேட்டி

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'AIADMK workers don't need to beat Jalra for BJP'-pugahendi interview

பாஜகவிற்கு ஜால்ரா அடித்து அவர்களின் கால்களில் விழக்கூடிய அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழு பெங்களூர் புகழேந்தி  இன்று ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு வருகை தந்தார். இன்று ஜூலை 21 ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவை பெற்று உணவகத்தில் சாப்பிட்டார். அதேபோல் அவருடன் வந்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்களும் அங்கு உணவு உண்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி பேசுகையில், 'தமிழகத்தில் காலை சிற்றுண்டியை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தேன், பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் ஆரம்பித்தார், எம்ஜிஆர் சத்துணவு வழங்கினார். அதனை மெருகூடியவர்  ஜெயலலிதா. அந்த வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை செய்தார்கள் என பாராட்டினேன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று 21 கோடி ரூபாயை மேம்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளார். இதனை பாராட்டுக்குரிய விஷயமாக நாங்கள் பார்க்கிறோம்.

எங்களை பொறுத்தவரையில் நல்லவைகளை செய்யும்போது பாராட்டுகிறோம். அது மக்களுக்கு எதிராக திரும்பும் போது அதனை எதிர்க்கிறோம், அந்த வகையில் 21 கோடி ரூபாயை அம்மா உணவகத்திற்கு ஒதுக்கிய முதலமைச்சரை மனப்பூர்வமாக பாராட்டுகிறோம் என தெரிவித்தார். 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி  அம்மா உணவகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை, ஆட்சியில் இருந்தார், போனார், உணவு பொருள்களில் ஊழல் செய்தார் என வழக்கு தொடர்ந்தேன். வழக்கு மன்றத்தில் உள்ளது. இதுதான் அவரது சாதனை. எந்த நிதியையும் அம்மா உணவகத்திற்கு ஒதுக்காமல் ஏமாற்றி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒதுக்கியவர் ஸ்டாலின் எனவே இரண்டையும் சொல்லியாக வேண்டும். ஜெயலிதாவை நினைவில் நிறுத்தி அவர்கள் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யுங்கள். பெரும் அளவில் பெருமை செய்யுங்கள்.இந்தத் திட்டம் தொடர பல கோடி ரூபாயை நிதி ஒதுக்கி அம்மா உணவகங்களை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

'AIADMK workers don't need to beat Jalra for BJP'-pugahendi interview

மின் கட்டண உயர்வு என்பது தொடர்ந்து காலம் காலமாக இருந்தாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை, ஆனால் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும்,. அதனை அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளார்கள். முதலமைச்சர் அதனை பரிசீலனை செய்து மின் கட்டணத்தை குறைப்பதற்கு முடிவெடுத்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்றார். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு எதையும் செய்யாதா, பிரதமர் மோடி எதையும் செய்ய மாட்டாரா, பாரதப் பிரதமரின் நாற்காலி ஆட்டத்தில் உள்ளது. அது நிரந்தரமான நாற்காலியாக இல்லை, 60 சீட்டுகள் தான் வித்தியாசமாக உள்ளது. மத்திய அரசின் ஆட்சி நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் கையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்த நாற்காலியை அவர்கள் தள்ளி விடுவார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவேன் என துடித்த பிரதமருக்கு கிடைத்த நீதி தான் தற்போது முடிந்த தேர்தல், 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் வலுப்பெற்றுள்ளது. ஜனநாயகம் தலைத்தோங்கி உள்ளது.

பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியும் நினைத்ததை செய்ய முடியாது. அது நடக்கவே நடக்காது என்ற நிலைப்பாடு இப்போது எழுந்துள்ளது. நாங்கள் அதிமுக கொடி பிடித்து அம்மாவின் புகழை சொல்லி வளர்ந்தவர்கள் நாங்கள் பாஜக மற்றும் மோடி அவர்களை ஒரு கட்சியாக பார்க்கிறோம், ஆனால் ஜால்ரா அடித்து அவர்களின் கால்களில் விழக்கூடிய அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என தெரிவித்தார்.

Next Story

2026 சட்டப்பேரவை தேர்தல்; ஆலோசனையைத் தொடங்கிய திமுக

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 2026 Assembly Elections; DMK initiated the consultation

2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான திமுகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தற்பொழுது நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பணிகளை தற்போதே திமுக துவங்கியுள்ளது.

தேர்தலுக்காக திமுக ஒருங்கிணைப்புக் குழுவை நேற்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஐந்து பேர்கள் கொண்ட இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்தும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த ஆலோசனைகளை குழு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இக்குழு ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து அக்குழு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.