Skip to main content

ஐ.டி. ரெய்டில் கட்டுகட்டாக பணம்..!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

IT  in raid  trichy

 

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் விமான நிலையத்திற்கு அருகாமையில் மொராய்சிட்டி என்று சொல்லக்கூடிய பல்வேறு நவீன வசதிகளுடனான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல ஏக்கர் நிலங்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், ஒருசிலரிடம் அவர்களுடைய இடத்தை மிரட்டி வாங்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான லேரோன் மொராய் என்பவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய இடத்தில் வைத்து நிலத்தை எழுதி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியாகவும், அதில் தாக்கப்பட்டவர் அரசு மருத்துனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை மொராய்சிட்டியில் துவங்கிய வருமானவரி துறை சோதனை  இன்றும் நடைபெறும் என்று கூறுகின்றனர். முதல்கட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்ட பணம் சிக்கி உள்ளதாகவும். மேலும் அவர்களுக்கு சொந்தமான கே.கே.நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்ற வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்