Skip to main content

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐடி ரெய்டு

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

IT raid at Jagadratsakan's house

 

சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதேபோல் பட்டாபிராம் பகுதியில் கல்லூரி பணியாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்தும் சோதனையானது நடைபெற்று வருகிறது. காலை 6:30 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் அகரம் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

2026 சட்டப்பேரவை தேர்தல்; ஆலோசனையைத் தொடங்கிய திமுக

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 2026 Assembly Elections; DMK initiated the consultation

2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான திமுகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தற்பொழுது நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பணிகளை தற்போதே திமுக துவங்கியுள்ளது.

தேர்தலுக்காக திமுக ஒருங்கிணைப்புக் குழுவை நேற்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஐந்து பேர்கள் கொண்ட இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்தும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த ஆலோசனைகளை குழு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இக்குழு ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து அக்குழு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்' - துரைமுருகன் பேட்டி

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 'If you give, who will not want' - Durai Murugan talk

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள்  கேள்விளை வைத்தனர். அப்போது, 'துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட  இருப்பதாகவும், அந்த வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட இருப்பதாகவும் கட்சிக்காரர்கள் எல்லாம் நினைக்கிறார்கள். உங்களுக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, கையெடுத்துக் கும்பிட்ட படி பதிலளித்த அவர், ''கொடுத்தா யாருதான் வேண்டாம் என்று சொல்வார்கள். இது எல்லோரும் சேர்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு. தமிழகத்தில் நடப்பது கூட்டு மந்திரிசபை. எனவே தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்'' என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.அதிமுகவுக்குள் நடப்பது தான் நாடகம்' என்றார்.