திருச்சி, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தரண்யா (28) எம்.காம் பட்டதாரி. இவர் திருச்சி புத்தூரில் உள்ள தனியார் ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கழுத்து மற்றும் தலை வலி அடிக்கடி இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக உறையூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், அவருக்கு அந்தப் பிரச்சனை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதில் விரக்தி அடைந்த தரண்யா, வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அங்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.