It is not just methanol that was mixed in fake liquor - new information

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதான மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

 It is not just methanol that was mixed in fake liquor - new information

இந்தச்சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததால் விஷத் தன்மை ஏற்பட்டது தொடர்பான தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில் மெத்தனால் மட்டுமல்லாது டர்பைன்டைன் ஆயிலும் கலக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கிய நிலையில் அவரிடம் இருந்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மெத்தனாலை வாங்கி கள்ளச்சாராயத்தில் பயன்படுத்தியது தெரிய வந்திருந்தது. இந்தநிலையில் புதுச்சேரியிலும் மெத்தனால் விற்பனை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

nn

மாதேஷ் சென்னையைச் சேர்ந்த ஒருநிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலமாக மெத்தில் டர்பன்டைன் ஆயில் என்கின்ற வேதிப்பொருளை 10 கேன்களில் வரவழைத்திருக்கிறார். அந்தக் கேன்கள் விருத்தாசலத்தில் உள்ள ஒரு செராமிக் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அந்த நிறுவனம் ஜோதி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. அதில் இரு கேன்களை மாதேஷ் பெற்றுக் கொண்டதாகவும், சின்னதுரைக்கு அந்தக் கேன்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளச்சாராயத்தில் டர்பன்டைன் ஆயில் கலக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் கேசவன் என்ற இருவரைப் பிடித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment