Skip to main content

''ஒரு நாளில் 24 லட்சம் பேருக்கு தேர்வு நடத்தி 7 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதெல்லாம் நியாயம் இல்லை'' - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

"It is not fair to conduct an exam for 24 lakh people in one day and select 7 thousand people" - Minister Palanivel Thiagarajan's speech

 

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

 

அந்த தீர்மானத்தில், ‘டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 700 பேர் தேர்வானது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி முகாமில் இருக்கும் 700க்கும் மேற்பட்டோர் நில அளவர் ட்ராஃப்ட்மேன் பணியிடங்களுக்கு தேர்வு பெற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். தென்காசியில் ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோரும் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள்.

 

nn

 

இது தொடர்பாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''இது தொடர்பாக ஆராய்ந்து டிஎன்பிஎஸ்சி விரிவான விளக்கத்தை விளக்கிக் கூறி இருக்கிறேன். டிஎன்பிஎஸ்சி பல வகையில் சீர்திருத்தக்கூடியது என்பதை நானே இங்கு கூறியிருக்கிறேன். மூன்று ஆண்டுகளாக தேர்வே நடக்கவில்லை. அதற்கு முன் நடந்த ஆயிரம் பொறுப்புகளுக்கான தேர்வுகள் எல்லாம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு அப்படியே நிலுவையில் இருக்கிறது. மனிதவளம்தான் என்னை பொறுத்தவரை நிதியை விட அரசுக்கு முக்கியமானது என்பதற்காகவே தான் போன நிதிநிலை அறிக்கையில் அறிவித்தேன். சீர்திருத்தக் குழு உருவாக்கப்பட்டு தேர்வு மையங்கள், பயிற்சிகள் என எல்லா வகையிலும் மனிதவள மேலாண்மையைச் சிறப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிட்டேன். அதை இவர்கள் எதிர்த்தார்கள்.

 

திடீரென எனக்கு ஒரு கோப்பு வருகிறது, டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதற்கு 45 கோடி ரூபாய் கூடுதலாக வேண்டும் என்று. என்னவென்று போய் பார்த்தால் 7,000 இடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சுமார் 100 கோடி தாளை பின் செய்ய வேண்டும். 2,400 மையங்களில் தேர்வை நடத்த வேண்டும். இதற்கு 6 ஆயிரம் 7 ஆயிரம் இன்விஜிலெட்டர்ஸ் வேண்டும். இவர்களுக்கெல்லாம் 400 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனப் படிப்படியாக ஆய்வு செய்தேன்.

 

இந்த விதிமுறைகள் எல்லாம் இன்றைய காலத்திற்கு ஏற்புடையதல்ல. இது என்னுடைய நிர்வாக கருத்து. வருடத்திற்கு ஒரு தடவை 24 லட்சம் பேருக்கு தேர்வு நடத்துவது எல்லாம் நியாயமே இல்லை. 24 லட்சம் பேர் தேர்வு அதில் எழுதி ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்கு பல காடுகளில் மரங்களை வெட்டி நூறு கோடி பக்கத்தை டைப் அடித்து, தேர்வு கண்காணிப்பாளர்களை போட்டு, 42 கோடி செலவாகி ஒரே நாளில் தேர்வு நடப்பதெல்லாம் இன்று இருக்கக்கூடிய டெக்னாலஜி காலத்தில் சரியான விதிமுறையை இல்லை என்பதற்காகத்தான் நானே முதல் ஆளாக ஆரம்பித்து இந்த அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என முதல்வரின் அறிவுரைப்படி பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரை சந்தித்தது ஏன்? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Minister Palanivel Thiagarajan  Explanation by Why did meet the Prime Minister?

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதனிடையே, கடந்த 27ஆம் தேதி பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அன்று மதுரையில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார். அதன் பிறகு, இரவு 8 மணிக்கு மேல், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு, மதுரையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது, தமிழக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் மோடியை சந்தித்தாக தகவல் வெளியானது. மேலும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னையில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (05-03-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகல் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதனை தொடர்ந்து, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடிக்கும், எனக்கும் தனி உறவு உள்ளது போல் போலி செய்தியை பரப்பி வருகின்றனர். ஜனநாயகத்தின் முக்கிய பொறுப்பில் பிரதமர் இருக்கிறார். அதனால், அவரை வரவேற்கவும், வழி அனுப்புவதும் நமது அரசாங்கத்தின் வேலை. அதன் அடிப்படையில், தமிழக முதல்வர், பிரதமர் மோடியை வரவேற்கும் பணியை எனக்கு வழங்கினார். அதைதான் நான் செய்தேன். அரசாங்க பணியின் காரணமாகவே பிரதமரை சந்தித்தேன். தனிப்பட்ட விருப்பத்திற்கோ, அரசியலுக்கோ அல்ல” என்று கூறினார். 

Next Story

தேர்தல் பத்திரம்; கடைசி நேரத்தில் எஸ்.பி.ஐ வைத்த கோரிக்கையால் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
SBI's request at the last moment created a stir for Election bond details

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பத்திரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்.பி.ஐ) அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள், அவற்றை பாரத ஸ்டேட் வங்கியில் கொடுத்து எந்தவித கட்டுப்பாடுமின்றி நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துகளை தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வழங்கினர். அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பை வாசிக்கையில் “அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19 கீழ் உட்பிரிவு 1 ஐ ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் வருமான வரி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை, எஸ்.பி.ஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SBI's request at the last moment created a stir for Election bond details

தேர்தல் பத்திரங்கள் செல்லாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையப்பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்க்கட்சியினர் வரவேற்றுள்ளனர். 

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் நேற்று (04-03-24_ கோரிக்கை விடுத்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில், தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (05-03-24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நானும் 20 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றியுள்ளேன். இவ்வளவு கேவலமான வாதத்தை நீதிமன்றத்தில் இவ்வளவு பெரிய வங்கி வைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் தரவுகளை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அதற்கு 4 மாதம் தேவை என எஸ்.பி.ஐ கால அவகாசம் கோரியிருப்பது மிகவும் கேவலமானது. 

SBI's request at the last moment created a stir for Election bond details

ஒரு வங்கியை நடத்த ரிசர்வ் வங்கி அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் அடிப்படை தொழில்நுட்ப வசதிகள் இருக்க வேண்டும். உலக பொருளாதாரத்தில் 5வது நாடு எனக் கூறப்படும் நிலையில், அந்த நாட்டின் பெரிய வங்கியால் சிறிய தகவலை கூட அளிக்க முடியவில்லை என்பதை கேட்கவே நடுங்குகிறது. நாளை காலையே தரவுகளை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதனை அன்று கொடுக்க வேண்டும். அதனை வழங்கும் திறனை எஸ்.பி.ஐ வங்கி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வழங்க 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று எஸ்.பி.ஐ நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.