Skip to main content

“பிரதமரின் அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது” - பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

"It is difficult for farmers to accept the Prime Minister's announcement" -Balakrishnan interview

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்றுவரையிலும் விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 19.11.2021 அன்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும்> புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

 

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் அறிவித்த பின்னும் போராட்டத்தை தொடர்வது குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயி விரோத 3 வேளாண் சட்டங்களைக் கடந்த நவம்பர் 19 அன்று பிரதமர் ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா ஏற்கனவே அறிவித்தபடி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்துள்ளது. விவசாயிகளைப் பொறுத்தவரையில் விவசாயிகளின் வருமானத்தை நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம். 

 

அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும் போன்ற எந்த வாக்குறுதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. எனவே பிரதமரின் அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தைத் தொடங்கும்போது வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதோடு மேலும் இரண்டு முக்கிய கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்திருந்தார்கள். மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 திரும்பப் பெறப்பட வேண்டும்; அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுவதோடு, அதை உத்தரவாதப்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 

தற்போது பிரதமர் 3 கோரிக்கைகளில் முதல் கோரிக்கையான வேளாண் சட்டடங்களை இரத்து செய்வதாக, அதுவும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் அவராகவே அறிவித்திருக்கிறார். மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. மேலும் இந்தப் போராட்டக் களத்தில் சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு நினைத்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். உயிரிழந்த குடும்பங்களுக்குத் தக்க இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.  

 

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையின் சூத்திரதாரியான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். நேற்று (22.11.2021) விவசாயிகளின் மகாபஞ்சாயத்து லக்னோவில் நடைபெற்றது. அதில், 26.11.2021 அன்று போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினம் நாடு முழுவதும் நினைவுக்கூறப்படும் எனவும், 29.11.2021 முதல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற குளர்கால கூட்டத்தொடரின்போது டிராக்டர்களில் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 26 அன்று மாவட்ட தலைநகர்களில் தொழிலாளர்களோடு இணைந்து பேரணிகள் நடத்தவும், அன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஓராண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - சுனிதா கெஜ்ரிவாலின் புதிய பிரச்சாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Sunita Kejriwal launched a new campaign 'Blessing Kejriwal'

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இதற்காக கெஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு கூறுவதற்காக வாட்ஸ் ஆப் எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் இன்றில் இருந்து ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ என்று ஒரு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இந்த வாட்ஸ் ஆப் எண்ணின் மூலம் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்த்து மற்றும் ஆசிர்வாதங்களை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என்று பேசியுள்ளார்.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.