இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவா் சிவன் இன்று தனது சொந்த ஊரான நாகா்கோவில் சரக்கல்விளைக்கு வந்தாா். அப்போது அவா் பத்திாிக்கையாளா்களிடம் கூறும் போது, “ஃபோனி புயல் குறிப்பிட்ட பகுதியில் கரையை கடந்துள்ளது. இதுபோன்ற புயல் பாதிப்பு ஏற்படும்போது அதனை துல்லியமாக கணிக்க முயன்றதால் உயிா் சேதம் இல்லாமல் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க முடிந்தது.
அடுத்த ஆண்டு சூாியனில் ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்.1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன்பிறகு சூாியன் பற்றி தொியாத பல தகவல்கள் தொியவரும். இதேபோல் சந்திராயன் 2, ஜீலை 9-ல் இருந்து 14-க்குள் ஏவப்பட உள்ளது. இந்த சந்திராயன் 2 நிலவில் செப்டம்பா் 6-ம் தேதி இறங்கும். இதனை வல்லரசு நாடுகள் மட்டுமல்லாமல் உலக நாடுகளே எதிா்பாா்த்து கொண்டு இருக்கிறது. மேலும் 2022-ல் இந்தியா, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும். அதற்கான ஆய்வுகளும் முயற்சிகளும் நடந்து வருகிறது” என்றாா்.