Skip to main content

ஓசியில் மது கேட்டு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய போதை இளைஞர்

 

Intoxicated youth vandalized Tasmac shop for liquor in OC

 

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்த இளைஞர் ஓசியில் மது கேட்டு தராததால் கடையை அடித்து நொறுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள செங்காட்டூர் பிரிவு சாலையில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக மாதேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை வெங்கடேஷ் என்ற இளைஞர் மது அருந்த வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவரிடம் ரகளையில் ஈடுபட்டார். பின்னர் டாஸ்மாக் ஊழியர்களிடம் ஓசியில் மது   கேட்டு தகராறு ஈடுபட்டதோடு, மது தராததால் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !