Skip to main content

மதுபோதையில் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்; வைரலாகும் வீடியோ

 

Intoxicated young women hijack city bus; A viral video

 

சென்னை வாலாஜா சாலையில் ஆறு இளம்பெண்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

நேற்று இரவு சென்னை வாலாஜா சாலை அருகில் 6 இளம் பெண்கள் மது போதையில் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள் அந்த வழியாக வந்த மாநகர பேருந்து உள்ளிட்ட வாகனங்களை வழி மறைத்து இடையூறு செய்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, ஆறு பேரில் மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களை காவல் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேரும் காவல் வாகனத்தில் ஏற மறுத்து ரகளையில் ஈடுபட்டதால் அங்கு கூட்டம் கூடியது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !