Skip to main content

முகம் சுளிக்கும் வகையில் சிறுநீர் கழித்த போதை நபர்; குடிகாரர்களால் அலறும் திருப்பூர் பேருந்து நிலையம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

An intoxicated person who urinated in a frowning manner; Tirupur bus station is full of drunkards

 

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மது போதையில் பேருந்து நிலையத்திற்கு வந்த ஒருவர், கடையில் உள் வாடகை பிரச்சனை தொடர்பாக ரகளையில் ஈடுபட்டார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளுக்கு மத்தியில் போதையில் சண்டை போட்டுக் கொள்ளும் அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அந்த போதை ஆசாமி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக வைத்திருந்த இரும்பு நாற்காலியை கீழே தள்ளிவிட்டு பிரச்சனை செய்தார்.

 

அங்கிருந்த கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த போதை ஆசாமி, அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் அந்த இடத்திலேயே சிறுநீர் கழித்தார். பின்னர் அதிலேயே படுத்துக்கொண்டார். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இதுபோன்ற போதை ஆசாமிகளின் அட்டூழியங்கள் தொடர்ந்து நீடித்து வருவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அண்மையில் ஈரோட்டில் இதேபோல மது போதையில் இளைஞன் ஒருவன் பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்தது தொடர்பாகப் பெண் ஒருவர் மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூர் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மது போதையில் வகுப்புக்கு வந்த மாணவர்கள்! - ராமதாஸ் கண்டனம் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Students came to school who consumed alcohal

 

“அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்” என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; “விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரில் செயல்பட்டு வரும்  அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் நேற்று மது போதையில் பள்ளிக்கு வந்து, வகுப்பறைகளில் பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தகாத சொற்களால் திட்டியும், பாடம் நடத்தவிடாமல் தடுத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்குள் கற்களை வீசியும், நுழைவாயிலை சேதப்படுத்தியும் அவர்கள் வன்முறை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

 

மாணவர்கள்தான் நாட்டின் வருங்கால மன்னர்கள். அவர்களை நம்பித்தான் அவர்களின் குடும்பங்களும், சமுதாயமும், நாடும் உள்ளது. ஆனால், அவர்கள் எந்தப் பொறுப்பும் இல்லாமல் மது அருந்திவிட்டு, தங்களுக்கு கல்வி வழங்கும் கோயிலான பள்ளிக்கூடத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மது நாட்டையும், வீட்டையும் மட்டுமின்றி இளைய சமுதாயத்தையும் எந்த அளவுக்கு சீரழிக்கும் என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

 

மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு அவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பதுதான் இந்த சீரழிவுக்கு காரணம் ஆகும். பேரங்கியூரில் பள்ளிக்கூடத்திற்கு மிக அருகிலேயே மதுக்கடை செயல்பட்டு வருவதுதான் அந்த பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி ரகளையில் ஈடுபட்டதற்கு காரணம் ஆகும். மாணவர்களைக் கெடுக்கும் மதுக்கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை வலியுறுத்தியும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மூடப்படவில்லை; அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டபோதும் கூட அந்த மதுக்கடை அகற்றப்படவில்லை.

 

தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் அனைத்து தரப்பு மக்களையும் சீரழிப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சான்றுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவை தமிழகத்தை எத்தகைய பேரழிவுக்கு அழைத்துச் செல்லும் என்பது அரசுக்கு தெரியாததல்ல. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்