வேலூர் மாவட்டம், ஆம்பூரில் குடியரசுக்கட்சியின் பொதுக்கூட்டம் பிப்ரவரி 2ந்தேதி இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக ஆம்பூருக்கு இன்று மதியமே வந்துவிட்டார் அக்கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன்.
பொதுக்கூட்டத்துக்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜகவும், மோடியும் மக்கள் விரோத ஆட்சியை நடத்தியுள்ளார்கள். சிறுபான்மையின மக்களை நசுக்கியுள்ளார்கள். இந்த ஆட்சி வீழ்த்தப்பட வேண்டிய ஆட்சி என்றார்.
தொடர்ந்து, பசு பராமரிப்பு செய்வதற்காக 750 கோடி ரூபாய் பராமரிப்பதற்காக ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கஜா புயலுக்காக தமிழகத்திற்கு ஒதுக்கிய தொகை மிகமிக குறைவு. மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 53 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த 4 ஆண்டு காலத்தில் சராசரி ஒரு மனிதருக்கு ரூபாய் ஒரு லட்சம் கடனாக உள்ளது. வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என்றார்.
வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்கிற கேள்விக்கு ?.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பாஜக தலைமையில் இடம்பெறவுள்ள அணியில் இந்திய குடியரசு கட்சி இடம்பெறாது. பாஜகவை தவிர்த்து மதச்சார்பற்ற கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி இருக்கும்.