International Day of Yoga; Awareness by doing 100 Yogasanas

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக சமுதாய சேவா சங்கத்தினர் மற்றும் மாணவ-மாணவிகள் 100 விதமான யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisment

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 21ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈரோடு கொங்கு கலையரங்கில் வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே‌.எம். மயிலானந்தன் தலைமை தாங்கினார்.

Advertisment

இதில், பள்ளி மாணவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சூரிய நமஸ்காரம் , கைப் பயிற்சி, கண் பயிற்சி, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட 100 விதமான யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பேசுகையில், 2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா செய்வது கடினம் என பலர் நினைத்த நிலையில், வேதாத்திரி மகரிஷி எளிமைப்படுத்தி கற்றுக் கொடுக்க வழிவகை செய்தார். 20 நாடுகளில் பலருக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் யோகா கற்று தரப்படுவதாகவும் தெரிவித்தார்.