Skip to main content

கலப்புத் திருமணம் செய்த குடும்பங்கள் கோவிலுக்குச் செல்லத் தடை - எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

nn

 

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் ஸ்ரீபெரியகாண்டியம்மன் அண்ணமார் திருக்கோவில் அமைந்துள்ளது. 1200 கும்பங்களின் குல தெய்வமாக இக்கோவில் விளங்கி வரும் நிலையில், வேறு சாதி திருமணம், கலப்பு திருமணம் போன்றவற்றைச் செய்ததாகக் கூறி, 70 குடும்பத்தினரைக் கோவிலுக்குள் வர கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கடந்த மாதம் 1-ம் தேதி விசாரணை மேற்கொண்ட மொடக்குறிச்சி வட்டாட்சியர் இளஞ்செழியன், பாதிக்கப்பட்ட 70 குடும்பத்தினரையும் கோவிலுக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியரின் உத்தரவைச் செயல்படுத்தாமல் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்று அளித்தனர்.

 

அந்த மனுவில், கலப்பு திருமணம் செய்த குடும்பங்களைச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி தீண்டாமையைக் கடைப்பிடித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களைக் கோவில் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்மன் கழுத்திலிருந்த தாலியைப் பறித்துச் சென்ற நபர்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
theft inside temple near vellore

வேலூர் மாநகரம், கொசப்பேட்டையில் ஆனைகுலத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலை முன்பு அமர்ந்து சாமி கும்பிடுவதுபோல் இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் சுவாமி சிலையின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைக் கழட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

பூஜைக்கு வந்த அய்யர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போனதை தொடர்ந்து அதிர்ச்சியாகி இதுபற்றி கோவில் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் புகார் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் அம்மன் சிலை கழுத்திலிருந்த தாலியைத் திருடிச்செல்வது தெரிந்தது. இது தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

theft inside temple near vellore

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதை தொடர்ந்து திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் கழுத்திலிருந்த தாலிய யாரோ பறிச்சிட்டாங்க, இது அபசகுணம். இந்த செயலால் ஆண்களுக்கு ஆபத்து என யாரோ வதந்தியை பரப்பிவிட அப்பகுதி பெண்கள் பரபரப்பும், அச்சமும் அடைந்துள்ளனர். 

Next Story

கோழி திருடிய வழக்கு; நகரத்தில் குவிந்த 1000 போலீஸார்! 

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Chicken theft case; 1000 police gathered in the city!
மாதிரி படம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக  கடந்த மாதம் 21 ஆம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை கண்டித்தும் வழக்கை நீக்க கோரியும் நேற்று (7ம் தேதி) கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் நேற்று ஊர்வலம், பேரணி,  ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். அதேபோல் தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தினர். 

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோபி பேருந்து நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பினர். அதேபோல், வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதித்தனர். இதனால் நேற்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.