
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 110 காவல் நிலையங்களை மத்திய தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஈரோடு தெற்கு காவல் நிலையத்தை மத்திய தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இன்று பெருந்துறை காவல் நிலையத்தை மத்திய தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மகேந்திரன், கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். காவல் நிலையத்தில் காவலர்கள் தினசரி செய்யும் பணிகள் எடுக்கும் நடவடிக்கைகள் காவல் உதவி ஆய்வாளர்கள் அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தனர் அதேபோல் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பார்வையிட்டனர். இந்த மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வின் அடிப்படையில் அளிக்கும் அறிக்கையை கொண்டு சிறந்த காவல் நிலையமாக எது என்பது தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.