Skip to main content

காதல் மனைவி... பூட்டிய வீட்டுக்குள் அழுது கொண்டே இருந்த குழந்தை... நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

திருப்பூரில் காதல் திருமணம் செய்த இரண்டாவது மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேற்கு வீதியை சேர்ந்தவர் நிஷார் அகமது (37). கழிவு குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஹசினா (21) என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நிஷார் அகமதுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி ஹசினா நடவடிக்கையில் அடிக்கடி நிஷார் அகமதுக்கு சந்தேகம் அடைந்து அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. 

 

incidentஇந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்றும் கணவன், மனைவி இடையே சண்டைப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த நிஷார் அகமது வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டி விட்டு அங்கிருந்த கத்தியால் மனைவி கழுத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஹசினா படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் நிஷா அகமது தனது கழுத்தை கத்தியால் தனக்கு தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரும் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. வீட்டுக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் மட்டும் நீண்ட நேரமாக கேட்டுள்ளது.இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காததால் அருகில் வசிக்கும் ஹசினாவின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஹசினாவின் தயார் வீடு அருகில் இருப்பதால் தனது மகள் வீட்டுக்கு உடனடியாக வந்தார்.


பின்பு குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து வந்ததால் பதறிப் போன ஹசினாவின் தாய் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ஹசினா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், நிஷார் அகமது கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், நிசாரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஹசினா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் நிசார் மீது திருப்பூர், வீரபாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நிசாரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரது முதல் மனைவி பிரிந்து சென்றுள்ளார் என்றும், அதன் பின்பு காதலித்து ஹசினாவை திருமணம் செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறு; போலீசார் குவிப்பு

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Dispute caused by Digital Banner; Police build up

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறில் கோவில் பண்டிகை கலவரக்காடான சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை பொய்யாமணி அம்பேத்கர் நகரில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த பன்னிரண்டாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் குறிப்பிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். அந்த டிஜிட்டல் பேனரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது.

இதில் இரண்டு தரப்பு மோதி கொண்ட நிலையில் நான்கு பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சாரார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு; காவல்துறையினருக்கு நீதிமன்றம் கெடு!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Court time for the police for Neo Max Fraud Case

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆகின. 

இந்த வழக்குகள் அனைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தண்டபானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘நிதி நிறுவனங்களில் ஆசை வார்த்தையை நம்பி 3.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், 11,709 பேர் மட்டுமே தங்களுடைய முதலீட்டுகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். தங்களிடம் முதலீடு செய்தவர்களின் விபரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் ஆகிய முழு விவரங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வழங்க வேண்டும். 

அதே போல், பாதிக்கப்பட்டவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக முழுவதுமாக அறியும் வகையிலும், மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும் விதமாகவும் பரந்த அளவில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெறுவதில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முனைப்பு காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து புகார்களை பெற்று, இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து 15 மாதங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.