விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை நூதனமான முறைகளில் கடத்திவரப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதிலும் திருச்சி விமானத்தில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுவருவதும், அதனைத்தொடர்ந்து சோதனையில் பிடிபடுவதும் வழக்கமான ஒன்று.
இந்நிலையில், சார்ஜாவிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (01.12.2021) வந்துசேர்ந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு பயணி நூதனமான முறையில் ஆசன வாயில் வைத்து பசை வடிவிலான மூன்று தங்கக் கட்டிகளைக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 586.500 கிராம் என்றும் அதன் மதிப்பு 28.69 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பயணியைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.