Skip to main content

மறைமுகத் தேர்தல்- வெற்றி பெற்றவர்கள் விவரம் (11.45AM)!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது. 


மறைமுகத் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம் (11.45AM)

தேனி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரீத்தா தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு  செய்யப்பட்டார். 

கரூர் தான்தோன்றி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சிவகாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கரூர் க.பரமத்தி ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவின் மார்க்கண்டேயன் தேர்வு. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த வள்ளியாத்தாள் குருசாமி தேர்வு.

கரூர் ஒன்றியத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் தேர்வு. 

திருச்சி மாவட்டம், முசிறி தா.பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷர்மிளா போட்டியின்றி தேர்வு. 

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக அதிமுகவின் தங்கம்மாள் தேர்வு.

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 


மறைமுகத் தேர்தல் வெற்றி நிலவரம் (11.45AM)

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி (09/27)
அதிமுக கூட்டணி- 5
திமுக கூட்டணி- 4

ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி (38/314)
அதிமுக கூட்டணி- 29
திமுக கூட்டணி- 9


 

சார்ந்த செய்திகள்