Skip to main content

தமிழகம் மற்றும் கேரளாவில் 5 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு!!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

 

The Indian Meteorological Survey predicts 5 days of heavy rainfall in Tamil Nadu and Kerala

 

தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் வரும் 5-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாக உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பின்னர் புயலாக மாறும். அதேபோல் வரும் 8-ஆம் தேதி மற்றோரு காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வாங்க கடலில் உருவாகும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

   

சார்ந்த செய்திகள்