Independence Day Celebration at Elliotts Beach

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது. அதேபோல தமிழகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர்எலியட்ஸ் கடற்கரையில் 'Beach boys walkers' சார்பாக இன்று தேசியக் கொடி ஏற்றபட்டது. சிறப்பு விருந்தினராக பால சுந்தரம் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.

Advertisment

 Independence Day Celebration at Elliotts Beach

இந்த விழாவில் அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.வெங்கடேசன், Beach Boys நிர்வாகி மோகன் ராகவன், முன்னாள் நிர்வாகி ஏழுமலை, மீடியா 95 முதன்மை செயல் அதிகாரி பழனி ராஜா மற்றும் Beach boys members உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர்எலியட்ஸ் கடற்கரையில் Beach boys walkers சார்பாக தேசியக் கொடி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.