nn

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 48 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 48 ரூபாய் விலைஉயர்ந்து 1,903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ரூபாய் 1,855 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 48 ரூபாய் விலை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்காக சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது.