Skip to main content

விஜய் முறையாக வரி கட்டியுள்ளதாக வருமானவரித்துறை தகவல்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முற்றிலும் முடிவடைந்து, இறுதி பணிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையிட்டனர்.

 

Income department officials said Vijay paid income tax properly

 



அதுமட்டும் இல்லாமல் இன்று காலை 11 மணி முதல் ஏற்கனவே பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்திய அதே  8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளதாகவும், அதற்கு அவர் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பல இடங்களில் ஐ.டி ரெய்டு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 IT raided many places in Chennai

 

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவுளி நிறுவன உரிமையாளர் நீலகண்டனுக்கு சொந்தமான கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், சென்னை நுங்கம்பாக்கம் மண்ணடியில் உள்ள தொழிலதிபர் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

பெங்களூரிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அதிகாரிகளின் உதவியுடன் இந்தச் சோதனையை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மாறுவேடத்தில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள்! 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Income tax officials in disguise!

 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும், சென்னையில் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும், கோவையில் அமைச்சருக்கு நெருக்கமானவர் என அறியப்படும் தி.மு.க. நிர்வாகியான மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. 

 

அதேபோல், சென்னை தி.நகரிலுள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டல், புரசைவாக்கம் மேகலா திரையரங்கு அமைந்திருக்கும் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் பொருட்களை விநியோகம் செய்யும் அமித் என்பவரின் வீடு மற்றும் சென்னை வேப்பேரியில் உள்ள ஓசியன் ஒன் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகிய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பாசாமி ரியல் எஸ்டே நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இதில் சில இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

 

Income tax officials in disguise!

 

நேற்று காலை 7 மணி அளவில் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் சோதனையைத் துவங்கியது வருமானவரித் துறை. இதில், சென்னை தி.நகரிலுள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டலில் சோதனை நடத்திய இரு அதிகாரிகள், சோதனை நடைபெற்ற தினமான 3ம் தேதிக்கு முன்தினமே அதாவது 2ம் தேதியே அந்த ஹோட்டலில் சுற்றுலாப் பயணிகள் எனக் கூறி அறை எடுத்துத் தங்கியுள்ளனர். மேலும், ஒரு நாள் முழுக்க அந்த ஹோட்டலில் என்ன நடக்கிறது எனக் கண்காணித்துள்ளனர். மறுநாள்(3ம் தேதி) காலை 7 மணிக்கு ஹோட்டலின் வரவேற்பறைக்கு வந்த இரு அதிகாரிகளும், தாங்கள் வருமான வரித்துறையினர் என்று கூறி தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பின் சோதனையைத் துவக்கியுள்ளனர். இது தற்போது பேசு பொருளாகியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்