
விழுப்புரத்தில் 22 வயது இளைஞர் இருசக்கரவாகனத்திற்குதவணை தொகை கட்டாததால் தனியார்நிதி நிறுவனஊழியர் தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டவானக்காரகுப்புசாமிதெருவைச்சேர்ந்த 22 வயது இளைஞர் ரவிக்குமார். தனது குடும்பத்துடன் வசித்துவந்த ரவிக்குமார் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அண்மையில் தனியார் நிதி நிறுவனத்தின் உதவியுடன் தவணை தொகையில் ரவிக்குமார் இருசக்கர வாகனம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிலமாதமாகதவணை தொகை கட்டப்படாத நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர் மேகநாதன் ரவிக்குமாரின்வீட்டிற்குச்சென்றுதகாத முறையில்திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்த ரவிக்குமார் கடந்த ஜூன் 25 ஆம் தேதி பூச்சுமருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவிக்குமார் இன்று சிகிச்சைபலனின்றிஉயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்தொடர்பாகத்தனியார்நிதி நிறுவனஊழியர் மேகநாதன் மீது வழக்குப்பதிவு செய்தபோலீசார்இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)