Skip to main content

திருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு!

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே உள்ள உணவு விடுதியில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

incident in thiruthani... police arrest


திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர்தான் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர். சாலையில் சென்று கொண்டிருந்த மகேஷை அந்த கும்பல் பட்டாக்கத்தியுடன் துரத்த, உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிய மகேஷ் மக்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அருகிலிருந்த உணவகம் ஒன்றில் புகுந்துள்ளார். அங்கும் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மகேஷை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. அந்த உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் இதனைக்கண்டு அச்சத்தில் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்க, சிலர் என்ன செய்வதென்றே தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயினர். 

 

incident in thiruthani... police arrest

 

சில நிமிடப்பொழுதில் மகேஷை வெட்டி வீழ்த்திய அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட உயிருக்கு  போராடி கொண்டிருந்த மகேஷை அங்கிருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தலை மட்டும் கையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதால் மகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். 

 

incident in thiruthani... police arrest

 

இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கைப்பந்து விளையாட்டில் விளையாட அனுமதிக்கவில்லை என்பதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மகேஷ் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஒரு ஆண்டுக்கு முன்பு திருவள்ளூர் பெருமாள்பட்டு பகுதியில் கைப்பந்து போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்டது இந்த விரோதம்.

இதில் மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேருக்கும், பலவழக்குகளில் தேடப்பட்ட அதே பகுதியை சேர்ந்த விமல், சென்னையை சேர்ந்த லாலு ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. விமல், லாலு மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில் இந்த மோதல் நாளடைவில் வலுக்க மகேஷின் நண்பர் விக்கியை கொலை செய்தனர். பால் தினகரன் கையை வெட்டினர். இப்படி மகேஷின் நண்பர்களை கட்டம் கட்ட  தொடங்கியதை அறிந்த மகேஷ் விமலை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார்.

ஆனால் மகேஷின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்த விமல் அதற்கு பழிதீர்ப்பதற்காக அவனது நண்பர்களுடன் சேர்ந்து மகேஷை வெட்டி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

incident in thiruthani... police arrest

 

இந்த கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மகேஷை வெட்டி கொலை செய்த விமல் குமார், அஜித் குமார், ராஜ்குமார், கோபி ராஜ்  ஆகிய 4 பேர் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கம் போல் கைதான நால்வரின் புகைப்படமும் கை உடைக்கப்பட்ட நிலையில் மாவுக்கட்டுடன்  வெளியானது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.