Skip to main content

சாலையோரம் உறங்கிய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை?; தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யும் பகீர் காட்சி

 

incident in thirupur-cctv video- police investigation

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலையில் ஓரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மர்ம நபர் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் புறவழிச்சாலை பகுதியில் ஒரு கடையின் முன்பு ஆதரவற்ற பெண் ஒருவர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது உறங்கிக் கொண்டிருந்த பெண் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்யும் பதற வைக்கும் சிசிடிவி கட்சி வெளியாகி இருந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை அருகில் உள்ள மழைநீர் வடிகால் பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்துகொண்டு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது முழுமையாக உறுதி செய்யப்பட பிரேதப் பரிசோதனை விவரத்திற்காக காத்திருக்கிறது காவல்துறை. அதேநேரம் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !