சிவகாசி அம்மன்கோவில்பட்டி தெருவைச் சேர்ந்த ஜெயலட்சுமியும் கணேசமுத்துவும் தவறான தொடர்பு வைத்திருந்தனர். கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ஆனாலும், ஐந்து வருடங்களாக, தங்களது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பழகி வந்தனர். ஒருகட்டத்தில், கணேசமுத்துவின் அண்ணன் ராமருக்கு விஷயம் தெரிந்து கண்டித்துள்ளார். உள்ளூரில் இனி நாம் பழகமுடியாது என்று புழுங்கித் தவித்த இருவரும் திருச்செந்தூர் சென்றனர்.

incident in thiruchendur... police investigation

Advertisment

Advertisment

தற்கொலை செய்ய முடிவெடுத்து, விஷமருந்தி உயிரைவிட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அருகே, வாயில் நுரை தள்ளிய நிலையில், கடற்கரையில் ஜெயலட்சுமியும் கணேசமுத்துவும் ஒருவர் மீது ஒருவர் இறந்து கிடந்தனர்.

இத்தகவல், திருச்செந்தூர் கோவில் காவல்துறையினருக்குக் கிடைத்தது. உடனே, சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றிய திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.