வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாகநேரி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் வேலரசன். அக்கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் குளிக்க பூங்குளம் புதூர் பகுதியில் உள்ள காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் சென்று குளிக செப்டம்பர் 22 ந்தேதி சென்றுள்ளார். குளிக்கும்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் வேல் அரசன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

incident to school student in vellore

Advertisment

Advertisment

இதைத்தொடர்ந்து உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு வேலரசன் இறந்த நிலையில் உடலை மீட்ட உறவினர்கள் அவர்களுடைய கிராமமான நாகநேரி பகுதிக்கு கொண்டு சென்றனர்.தகவலறிந்து சென்ற ஆலங்காயம் காவல்துறையினர் தற்போது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.