கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீரமுடையாநத்தம் கிராமம். இக்கிராமத்தில் ஜோதி(38) என்பவரின் மனைவி ரேவதி(33). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் ஜோதி இதை ரேவதியின் தந்தை கண்ணனிடம் முறையிட்டுள்ளார்.

incident in Sathyathorp? Police are investigating!

Advertisment

Advertisment

பின் ரேவதியை தான் விசாரிக்கிறேன் என கண்ணன் தன் மகளை நேற்று சுமார் 12 மணியளவில் ஒரு காரில் வீரமுடையாநத்தம் கிராமத்திலிருந்து அழைத்து சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். பிறகு மாலையில் வீட்டிற்கு காரில் திரும்பிய கண்ணன் தனது மகள் இறந்து விட்டதாகவும், திடிரென்று இறந்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த வீரமுடையாநத்தம் கிராமமக்கள் சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மமான முறையில் இறந்த ரேவதியின் தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் முக்கிய அரசியல் கட்சியில் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த ஜாதியின் பேரில் இறந்து போன அந்த பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த வயது குறைவாகவுள்ள வாலிபருடன் தொடர்பு உள்ளது என்று கட்டபஞ்சாயத்து செய்து அந்த பெண்ணின் அப்பாவின் கண்முண்னே கடுமையாக அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் இறந்ததை பெண்ணின் அப்பா கண்ணன் மறைத்து ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய முயற்சித்தபோது பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். கட்டபஞ்சாயத்து செய்தவரை இரண்டாவது குற்றவாளியாக வழக்குபதிவு செய்யப்பட்டு போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.