Skip to main content

தப்பியோட முயன்ற ரவுடி; சுட்டுப்பிடித்த போலீசார்!

Published on 09/12/2024 | Edited on 09/12/2024
incident police Chennai Vyasarpadi arivazhagan

சென்னையில் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஏ பிரிவு வகை (A Category) ரவுடி அறிவழகன். இவர் மீது காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஒரு முக்கிய வழக்கு தொடர்பாக இவரைப் பிடிக்க இன்று (09.12.2024) காவல்துறையினர் பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே சென்றனர். அப்போது ரவுடி அறிவழகன் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார் ரவுடி அறிவழகனை போலீசார் காலில், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். 

சார்ந்த செய்திகள்