திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலத்தை செர்ந்த மாலா என்கிற பெண்ணை பாம்பு கடித்து மருத்துவனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரமுடியாதபடி சாலை முழுவதும் உழவு வயல்போல் இருந்ததால் பரிதாபமாக இறந்துள்ளார்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச்சேர்ந்தவர் மாலா, வீட்டின் அருகே விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்தவரை பாம்பு கடித்துள்ளது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழேவிழுந்த மாலாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறினர். அந்த பகுதியை நோக்கி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூன்று கிலோ மீட்டருக்கு மூன்னாடியே சாலை மோசமாக இருந்ததால் வரமுடியாமல் திணறிநின்றுவிட்டனர். நீடாமங்கலத்தில் இருந்து வரதராஜபெருமாள்கட்டளை வரையிலும் மாலாவின் உறவினர்கள் மாற்றி மாற்றி தூக்கிவந்து ஆம்புலன்ஸ்ல் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாலாவை பரிசோதித்த மருத்துவரோ, மாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி கைவிரித்துள்ளார். ஆத்திரமான பொதுமக்களும், மாலாவின் உறவினர்களும் இந்த இறப்பிற்கு காரணம் மோசமான சாலைதான் என கூறி கலங்குகின்றனர்.

Advertisment

இதுகுறித்து நீடாமங்கலத்தைச் சேரந்த சண்முகம் என்பவர் கூறுகையில், "பத்து மாதங்களுக்கு முன்னாடி சாலை போடுவதாக தோண்டிப் போட்டதோட போயிட்டாங்க, அதுநாளில் இருந்து சைக்கிளில், டூவிலரில் காரில்கூட போகமுடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். தற்போது மழையால் தோண்டபட்ட சாலை முழுவதும் உழவு வயலைப்போல மாறிவிட்டது. சாலை சரியாக இருந்திருந்தால் ஆம்புலன்ஸ் ஊருக்கு வந்திருக்கும். மாலாவை காப்பாற்றியிருக்கலாம். மோசமான சாலையால் ஒரு உயிரே போயிடுச்சி" என்கிறார் கோபமானவராக.

சாலை வசதியில்லாமல் ஒரு உயிர் போயிருப்பதை கண்டு பொதுமக்கள் கலங்குகின்றனர்.

Advertisment