
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (60 வயது). இவர் தனது வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி பாலியல்வன்கொடுமைசெய்துள்ளார். அதையடுத்து சிறுமி வலி தாங்காமல் தனது தாயிடம், நடந்ததைக் கூறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து ராமநத்தம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் தாயார் அளித்தப் புகாரின் பேரில் சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்ததில், வன்கொடுமைசெய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதால்சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராமநத்தம் காவல்துறையினர் 60 வயது மணிகண்டனை கைது செய்து, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் 60 வயது முதியவரான மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பேத்தி வயதுடைய 8 வயது சிறுமிக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய 60 வயது முதியவர் செய்தஇந்தச் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)