Incident in chennai fear of being separated by Corona!

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்றுஒரே நாளில் 26,465 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 197 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 124 பேரும்தனியார் மருத்துவமனைகளில் 73பேரும்கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது.கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் மதுரவாயலில் கரோனாபாதிப்பு ஏற்பட்டு பிரிந்துவிடுவோமோஎன்ற பயத்தில் முதிய தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் அர்ஜுன். அவரது மனைவி அஞ்சலாட்சி.இவர்களுக்கு திருமணம் ஆகிஇதுவரை குழந்தைகள் இல்லாதநிலையில் தனியாக வசித்து வந்தனர். சில நாட்களாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களதுவீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவர் இருவருக்கும் உணவு சமைத்துக் கொடுப்பதைவழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று உணவு கொடுக்க முதியவர்கள் வீட்டிற்குவந்தபொழுது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ந்துபோனஅவர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தம்பதிகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக்கண்டுஅவர் உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

Advertisment

Incident in chennai fear of being separated by Corona!

இதனையடுத்துஅங்கு வந்த போலீசார் தம்பதியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்புஅஞ்சலாட்சிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் கரோனாபரிசோதனை செய்யப்பட்டிருந்ததும்,கரோனாமுடிவுக்காககாத்திருந்த நிலையில் ஒருவேளை கரோனாஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவோமோஎன்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும்தெரியவந்தது. இந்தச்சம்பவம் அந்தப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.