/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a5430.jpg)
அண்மையில் புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட முயன்று கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் இதே போன்று கஞ்சா இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தகவல் வெளியான நிலையில் இளைஞரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற அந்த இளைஞர் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு கஞ்சா போதையில்பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை அறிந்த அந்தபகுதி மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து கஞ்சா இளைஞர் இளங்கோவிடம் விசாரணை செய்த போலீசார் விசாரணையின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆரணியில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)