இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கிணறு தோண்டியபோது சில அடி ஆழத்தில் ஆற்று மணல் கிடைத்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதன் மூலம் சுமார் அறுபது யூனிட் மணலை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் அருகிலுள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் அவருடைய மகன் ராஜ்குமார் மற்றும் ராசு, முத்துவேல், சுடலை, முத்து, மற்றும் அடையாளம் தெரியாத மற்றொருவர் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து முத்துக்குமார் சேகரித்து வைத்திருந்த மணலை திருட்டுத்தனமாக டிராக்டரில் அள்ளியுள்ளனர்.
இதை தடுக்க முயன்ற முத்துக்குமாரை ஏழு பேர் சேர்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அதன்பின் அவருக்கு கடலாடி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து சாயல்குடி காவல் ஆய்வாளர் அமுதா, சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், சகாயபுஷ்பராஜ் தலைமையிலான போலீசார் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.