Skip to main content

எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா! 

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

Ilayaraja will take office as MP tomorrow!

 

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, நாளை (25/07/2022) மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ளார். 

 

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.களாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை அன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டோர், மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். 

 

ஆனால், அன்றைய தினம் இளையராஜா பதவியேற்காத நிலையில், நாளை (25/07/2022) மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இதற்காக, டெல்லி சென்ற இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Notification of date for Winter Session of Parliament

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் மாதம் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இதன்படி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிப்பு?

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Mahua Moitra MP Deprivation of office

 

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து அவர், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனி நலனுக்காகத் தான் இருந்திருக்கிறது.

 

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனி நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்வி கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பான நாடாளுமன்ற நன்னடத்தைக் குழுவின் அறிக்கையை மக்களவை சபாநாயகரிடம் நாளை (10.11.2023) அளிக்க உள்ளனர். நன்னடத்தை குழுவின் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்