Skip to main content

''இனி இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் தான்'' - நீதிமன்றம் எச்சரிக்கை

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 "If you file a public interest case in this regard, it will be a crime" - the court warned

 

திருவிழாக்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் வரையறைகள் தீர்மானிக்கப்படுவது குறித்து பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே பலமுறை தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இனிமேல் ஆடல் பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

கரூரை சேர்ந்த ஒருவர் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் ஆடல் பாடலுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை பின்பற்றாமல் மீண்டும் இது தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்கின்றனர். இனி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘என் காதலிய என்னோட அனுப்புங்க’ -  இன்னொருவர் மனைவியை வம்புக்கு இழுத்த இளைஞர் 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 youth threatens to send someone else  wife with him

 

நாகப்பட்டினம் காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்து சென்றதால், பொது மக்கள் அச்சமடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

 

மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார்  அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக பயமுறுத்திய அவர், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தார். இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றார். அவரை துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது. 

 

தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். விசாரணையில், 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்தவர், அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

நாகையில் முன்னாள் காதலியும் இன்னொரு மனைவியான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பட்டா மாற்றம்; கொந்தளித்த மக்கள் - அடியோடு ஸ்தம்பிப்பு!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

patta document issue nellai

 

டவுன் சர்வே ஆவணத்தில் பட்டா மாற்றப்பட்டதால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் ஒரு பகுதிவாசிகள்.

 

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள காந்தி நகர், கக்கன் நகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலம் காலமாக வசித்து வருகின்றனர். அந்த மக்கள் அந்தப் பகுதியில் உள்ள நெல் களத்தை விவசாயப் பணிகளுக்காக பலகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தை அரசு தரப்பில் கையகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிந்ததுடன், அதற்காகவே ‘களம்’ என்றிருக்கும் நிலத்தை கழிப்பிடம் என்று டவுன் சர்வே ரிப்போர்ட்டான டி.எஸ்.ஆர். படி பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

 

அதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகரின் தேரடித் திடலில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அறிவித்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தேரடி திடலில் உண்ணாவிரதமிருக்க போராட்டத்தில் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது போலீஸ் நிர்வாகம். ஆனாலும் தடையை மீறி நேற்று மைதானத்தில் கக்கன் நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 14 ஊர் நாட்டாமைகள் தலைமையில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் மற்றும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தகவல் போய் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமாரும் ஸ்பாட்டுக்கு முன்னதாக வர, அவர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

patta document issue nellai

 

கொந்தளிப்பான நிலையில் கழுகுமலை சாலையிலிருந்து நெல்லை சாலையை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். சிறிது தூரத்திற்குப் பின்பு பழைய தாலுகா அலுவலகம் முன்னே போலீசார் அந்த மக்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்ய, போலீசுக்கும் பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கழுகுமலை, நெல்லை பிரதான சாலைகள் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் காரணமாக மூடப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆத்திரமான மக்கள் தடுப்புகளை மீறித் தேரடித் திடலுக்குச் சென்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேசக் குரலெழுப்பினர்.

 

காலை 10 மணிக்கு ஆரம்பித்த மக்களின் மறியல் போராட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்தது. சுமார் மூன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் பதற்றம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்