Skip to main content

''அவர் இருந்திருந்தால் கதர் வேட்டி சட்டையில்...''- பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
NN

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது.  அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  09.05.2024 அன்று விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. அவர் சார்பில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருதை பெற்றிருந்தார். விருதை வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் இந்த விருதை அவருடைய ரசிகர்களுக்கும் கட்சியினருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சென்னை வந்துள்ள அவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் விருதினை வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இந்தப் புகழ், இந்த விருது எல்லாமே விஜய்காந்தையே சேரும். இதே விஜயகாந்த் அங்கே இருந்திருந்தால் கதர் வேட்டி, கதர் சட்டை போட்டுக்கொண்டு நெற்றி நிறைய திருநீறு வைத்துக்கொண்டு தமிழர்களின் பண்பாட்டை அங்கு நிலைநாட்டி அந்தப் பெருமைக்குரிய விருதை வாங்கி இருந்தால் அது மிகப்பெரிய வரமாக இருந்திருக்கும். ஆனால் காலம் தாழ்ந்து கிடைத்தாலும் அந்த விருதை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு மீண்டும் நன்றிகளை சொல்கிறேன். அது மட்டும் இல்லை அதற்குப் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் விருந்து கொடுத்தார்கள். அனைத்து விருது பெற்றவர்களையும் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள். அமித்ஷாவிற்கு இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

NN

அடுத்த நாள் ராஷ்டிரபதி பவன், ஓல்ட் பிரைம் மினிஸ்டர் ஹவுஸ், வார் மெமோரியல் உள்ளிட்ட இடங்களுக்கு விருது பெற்றவர்களை அழைத்துச் சென்று நேரடியாக காண்பித்தார்கள். அதில் நாங்களும் கலந்து கொண்டோம். அந்தப் பெருமைமிக்க தருணதத்தின் நிமிடத்தில் விஜயகாந்தை தான் நினைத்துக் கொண்டேன். அது முடிந்து நேற்று மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் மூலமாக விஜயகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை செய்தார்கள். அதற்கு உறுதியாக தேமுதிக சார்பில் டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். விஜயகாந்த் விழா என்றாலே சாப்பிடணும் எனச் சொல்லி அனைவருக்கும் உணவு செய்து கொடுத்தோம். அத்தனைப் பேரும் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் போனார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஏ.ஐ மூலம் விஜயகாந்தைத் திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Premalatha Vijayakanth Vijayakanth should not be used in films by AI without permission

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு, மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பலரும் நடிக்க வைப்பதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பலரும் இந்த விஷயத்தை கையில் எடுக்கயிருப்பதாக அவ்வப்போது கூறி வந்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அனுமதியின்றி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே, இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.

எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வேளியிட வேண்டும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாகும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடகச் செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

தமிழக ஆளுநரைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்! (படங்கள்)

Published on 28/06/2024 | Edited on 28/06/2024

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியியைச் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து மனு அளித்தார்.