
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் 'அண்ணாத்த'. இத்திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் அண்ணாத்த படம் வெளியாகி 50வது நாள் ஆனதையொட்டி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவு ஒன்றில், 'எதிர் விமர்சனம் இருந்தாலும், மழையை கடந்து அண்ணாத்த படம் வெற்றியடைந்துள்ளது. மழை இல்லை என்றால் அண்ணாத்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும் எனக் கூறியுள்ள அவர், 'பாட்ஷா' படத்தின் 'நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான் ஆனால் கெட்டவர்களை...' என்ற டயலாக்கை பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)